From Our PDNL

திருப்பலியில் கவனிக்க

அருட்தந்தையரே, துறவியரே, அருட்சகோதரிகளே,

• வருகைப் பாடலுக்கு முன் ஆயர், குருக்கள் மற்றும் இறைமக்களை வரவேற்கும் போது, அனைவரின் சார்பாக ஒருவர் மட்டும் ஆரத்தி எடுத்தால் போதுமானது. பாடலை அதற்கேற்றாற்போல பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம்..
மங்கள் ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம்
ஆயரே (அ) குருவே (அ) குருகுலமே வருக இறைமக்களே வருக பலியினில் கலந்து இறைவனில் இணைய
ஆயரே (அ) குருவே (அ) குருகுலமே வருக இறைமக்களே வருக

• பாடல் குழுவினர், அனைவருக்கும் தெரிந்த பாடலை தேர்வு செய்து, எல்லோரும் இணைந்து பாடும் வகையில் பொதுப்பாடல் புத்தகம் அல்லது துண்டறிக்கை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும். புதிய பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இசைக் கருவி மீட்டுவோர் ஆரவாரமின்றி, பாடல் வார்த்தைகள் வெளியில் கேட்கும்படி குறைந்த ஒலி அளவில் இசைக்க வேண்டும்.

• பதிலுரைப் பாடல் பகுதியில், குறிப்பிட்ட நாளுக்குரிய திருப்பாடல் அல்லது அதனைத் தழுவிய பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.

• காணிக்கைப் பவனியில் அடையாளக் காணிக்கை கொடுப்பது கூடாது. விசுவாசிகள் மன்றாட்டு வாசிக்கப் பட வேண்டும். பதில் மொழியை மட்டும் பாடலாம். எ.கா. ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

• குருவானவர் 'இவர் வழியாக' பாடிக் கொண்டிருக்கும் போதே தீப தூப – மலரஞ்சலி செலுத்தப்பட வேண்டும். தனியாக பாடல் பாடி அஞ்சலி செய்வது கூடாது.

• திருப்பலியில் நன்றி மன்றாட்டுக்குப் பின், நன்றி சொல்வது, நூலாடை போர்த்துவது, அன்பளிப்புகள் வழந்குவது ஆகியவை இடம் பெறுவது பொருத்தமானது.

அனைத்து குருக்களும், துறவிகளும், இறைமக்களும் இதனை மறைமாவட்டம் முழுதிலும் நடைமுறைப் படுத்தி ஒத்துழைத்திட அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


மேதகு. ஆ. ஜூடு பால்ராஜ்                                                                                             அருட்திரு. செயபாலன், அ.
ஆயர்.                                                                                                                              செயலர்,
                                                                                                                                       திருவழிபாட்டுப் பணிக்குழு

Renovation Download
Newsletter